முகப்பு
இந்தியா

ஜூலை மாதத்தில் இப்படி ஒரு சங்கடமா? 28 நாள்கள் கொண்ட பிப்ரவரியே பரவாயில்லை போல!!

ஜூலை மாதத்தில் ஒரு அரசு விடுமுறைகூட இல்லை என்று மாணவர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள்.

Updated On : 6 ஜூலை 2026, 1:46 pm IST
ஜூலை மாதம் - From govt site
பகிர்:

28 நாள்களைக் கொண்ட பிப்ரவரி மாதத்தில்கூட, தைப்பூசத்துக்கு ஒரு நாள் அரசு விடுமுறை இருக்கிறது, ஆனால் 31 நாள்களைக் கொண்ட ஜூலையில் ஒரே ஒரு நாள் விடுமுறை இல்லை என மாணவர்கள் வருத்தமடைந்திருக்கிறார்கள்.

2026ஆம் ஆண்டு ஜனவரி முதல், டிசம்பவர் வரை ஒவ்வொரு மாதமும் ஒரு அரசு விடுமுறையாவது இருக்கும். பிப்ரவரியில் தைப்பூசம் (வருத்தம் என்னவென்றால் அன்று ஞாயிறு), நவம்பரில் தீபாவளி, டிசம்பரில் கிறிஸ்துமஸ் என ஒரேயொரு விடுமுறை நாளாவது இருக்கும். ஜனவரி, ஆகஸ்ட் போன்ற மாதங்களில் விடுமுறைகள் அதிகம் கிடைக்கும்.

ஆனால், ஒரு ஆண்டில் ஒரே ஒரு மாதத்துக்கு மட்டும் விடுமுறையே இருக்காது. அது ஜூலை மாதம்தான். இந்த ஆண்டும் அது போல ஜூலை மாதத்தில் ஒரு அரசு விடுமுறை நாள்கூட இல்லை என்பதால் மாணவர்கள் கடும் வருத்தம் அடைந்திருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

ஆண்டுதோறும் புதிய காலண்டர் வந்ததும் மக்கள் முதலில் பார்ப்பது அரசு விடுமுறைகள் ஏதேனும் ஞாயிற்றுக்கிழமையில் வந்திருக்கிறதா என்பதைத்தான். காரணம். ஆண்டுதோறும் எத்தனை சனி, ஞாயிறுகள் வந்தாலும் வாரத்தில் ஒரு விடுமுறை என்றால் அதற்கு தனி சந்தோஷம்தான்.

அந்த வகையில், ஜூன் மாதத்தில்கூட மொஹரம் பண்டிகைக்கு விடுமுறை கிடைத்தது. அடுத்த ஆகஸ்ட் மாதத்தில் 15ஆம் தேதி சுதந்திர தினம், 26ஆம் தேதி மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாள்கள் விடுமுறை கிடைக்கும்.

அதுபோலவே செப்டம்பரிலும் கிருஷ்ண ஜெயந்தி (4ஆம் தேதி), விநாயகர் சதுர்த்தி (14ஆம் தேதி) என இரண்டு விடுமுறை நாள்கள் உள்ளன.

summary

Such a predicament in the month of July? It seems even February—with its 28 days—was better!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments