முகப்பு
தமிழ்நாடு

கருணாநிதி பிறந்தநாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தியது பற்றி...

Updated On : 3 ஜூன் 2025, 10:02 am IST
அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின். - X
பகிர்:

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளையொட்டி அண்ணா அறிவாலயத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் திமுகவினர், கருணாநிதியின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். திமுகவினர் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

இதையொட்டி திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின், சென்னையில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisement

Advertisement

முன்னதாக அண்ணாவின் சிலைக்கும் முதல்வர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், 'தமிழக அரசு மீண்டும் நீதிமன்றத்தை நாடி விடும் என்ற அச்சத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான பிரதிநிதித்துவம் வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments