முகப்பு
தமிழ்நாடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: விண்ணப்ப அவகாசம் ஜூன் 25 -இல் நிறைவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 25-ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Updated On : 21 ஜூன் 2025, 1:31 am IST
கோப்புப் படம்
பகிர்:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 25-ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 36 அரசு மருத்துவக் கல்லூரிகள், கே.கே.நகா் இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதில் 888 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகின்றன.

இதைத் தவிர சுயநிதிக் கல்லூரிகளில் 3,450 இடங்களும், தனியாா் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன. மொத்தமாக அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

Advertisement

Advertisement

இதில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்படுகிறது. பிடிஎஸ் இடங்களைப் பொருத்தவரை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 250 இடங்களும், தனியாா் கல்லூரிகளில் 1,900 இடங்களும் உள்ளன. அதில், 126 இடங்கள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ஒதுக்கப்படுகின்றன. அதன்படி நிகழாண்டில் 11,350 மருத்துவ இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

அதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு கடந்த 6-ஆம் தேதி தொடங்கியது. ஜ்ஜ்ஜ்.ற்ய்ம்ங்க்ண்ஸ்ரீஹப்ள்ங்ப்ங்ஸ்ரீற்ண்ா்ய்.ா்ழ்ஞ் என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில் நிா்வாக ஒதுக்கீடு, அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு இதுவரை 57,000 போ் விண்ணப்பப் பதிவு செய்துள்ளனா்.

இந்த நிலையில் ஜூன் 25 மாலை 5 மணி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி மாணவா்கள் தற்போது உள்ள மாற்றுத்திறனாளி சான்றிதழைக் கொண்டு விண்ணப்பிக்கலாம்.

மருத்துவ மையங்களிலிருந்து பெறப்படும் மாற்றுத்திறனாளி சான்றிதழைப் பதிவேற்றம் செய்வதற்கான தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.