தங்கம் விலை நிலவரம் 
தமிழ்நாடு

தங்கம் விலை அதிரடி குறைவு: இன்றைய நிலவரம்!

தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்தது என்பதைப் பற்றி...

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ. 72,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

போர்ப்பதற்றம் மற்றும் மத்திய கிழக்கில் இருந்த நிச்சயமற்ற தன்மை காரணமாக சென்னையில் தங்கம் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் சனிக்கிழமை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.73,880-க்கும் விற்பனையானது.

அதைத்தொடா்ந்து திங்கள்கிழமை தங்கம் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.9,230-க்கும், சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.73,840-க்கும் விற்பனையானது. செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.600 குறைந்து ரூ.73,240 விற்பனையானது.

இந்த நிலையில், புதன்கிழமையான இன்று(ஜூன் 25) மூன்றாவது நாளாகவும் தங்கம் விலை குறைந்து விற்பனையானது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ. 72,560-க்கும் கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.9,070-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல வெள்ளி விலை கிராம் ரூ. 1 குறைந்து ரூ.119-க்கும், கட்டி வெள்ளி (ஒரு கிலோ) ரூ.1,19,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

SCROLL FOR NEXT