முகப்பு
தமிழ்நாடு

நாகைக்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!

நாகையில் 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டினார்.

Updated On : 3 மார்ச் 2025, 12:34 pm IST
மு.க. ஸ்டாலின் - impress
பகிர்:

நாகை மாவட்டத்தில் ரூ.82.9 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

திமுக அரசின் திட்டப் பணிகளைப் பட்டியலிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் நாகை மாவட்டத்திற்கு ஆறு முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

அவர் வெளியிட்ட 6 முக்கிய அறிவிப்பு

Advertisement

Advertisement

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் தரம் உயர்த்தப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் ரூ.280 கோடியில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும்.

கீழ்வேளூர், வேதாரண்யம் வட்டங்களில் கால்வாய்கள், வடிகால்கள் மறுசீரமைக்கப்படும். ரூ.250 கோடியில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்

நாகை நகராட்சி கட்டடம் ரூ.4 கோடி செலவில் சீரமைக்கப்படும். நாகையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது.

சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும்.

தெற்குபொய்கைநல்லூர், கோடியக்கரையில் 3 பல்நோக்கு பேரிடர் மையங்கள் கட்டப்படும்.

நாகையில் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தில் ரூ.2 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். நாகையில் புதுமைப் பெண் திட்டம் மூலம் 7,469 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. நாகை மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இலங்கை கடற்படையின் அடக்குமுறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக மத்திய அரசு பார்க்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் தமிழ்க மீனவர்கள் 3,656 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் முன்னேறி இருப்பதற்குக் காரணம் இரு மொழி கொள்கைதான் என மத்திய அரசுக்குத் தெரியும். கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்மொழியின் வளர்ச்சி சிலர் கண்களை உறுத்துகிறது. போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிக்க மத்திய அரசு ஆட்சியாளர்கள் திட்டமிடுகின்றனர்.

தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் தீர்வு காண வேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளது என்றும் அவர் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments