FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பிளஸ் 2 முடிவுகள்: அதிகம் தேர்ச்சி பெற்ற முதல் 5 மாவட்டங்கள்!

பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தோ்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினா்.

Updated On : 8 மே 2025, 9:45 am IST
கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகளை சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வியாழக்கிழமை வெளியிட்டார்.

இந்தாண்டும் மாணவிகள் முதலிடம் பிடித்தனர். மாணவிகள் 96.70 சதவிகிதமும், மாணவர்கள் 93.16 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 3-ஆம் தேதி தொடங்கி 25-ஆம் தேதி முடிவடைந்தது. தோ்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினா்.

Advertisement

Advertisement

தேர்வு எழுதியவர்களில் 95.03 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 94.56 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் தேர்ச்சி சதவிகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள்

மாநிலத்தில் அரியலூர் மாவட்டத்தில் 98.82 சதவிகிதம் பேரும், ஈரோடு மாவட்டத்தில் 97.98 சதவிகிதம் பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 97.53 சதவிகிதம் பேரும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 97.48 சதவிகிதம் பேரும், கன்னியாகுமரி 97.01 சதவிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்களில் அதிகம் தேர்ச்சி பெற்ற முதல் 5 மாவட்டங்கள்

இதிலும் அரியலூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. அதாவது, அரியலூர் மாவட்டத்தில் 98.32 சதவிகிதம், ஈரோடு மாவட்டத்தில் 96.88 சதவிகிதம் பேரும், திருப்பூர் மாவட்டத்தில் 95.64 சதவிகிதம் பேரும், கன்னியாகுமரி 95.06 சதவிகிதம், கடலூர் மாவட்டத்தில் 94.99 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பாடவாரியான தேர்ச்சி சதவிகிதம்

அறிவியல் பாடப்பிரிவுகளில் 96.99 சதவிதம் பேரும், வணிகவியல் பாடப்பிரிவுகளில் 92.68 சதவிகிதம் பேரும், கலைப் பிரிவுகளில் 82.90 சதவிகிதம், தொழிற்பாடப் பிரிவுகளில் 84.22 சதவிகிதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பள்ளிகள் வகைப்பாடு வாரியான தேர்ச்சி விகிதம்

இருபாலர் பள்ளிகள் 95.30 சதவிகிதம், பெண்கள் பள்ளிகள் 96.50 சதவிகிதம், ஆண்கள் பள்ளிகள் 90.14 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 6.36 சதவிகிதம் கூடுதலாகவும், இருபாலர் பயிலும் பள்ளிகளில் ஆண்கள் பள்ளிகளை விட 5.16 சதவிகிதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவர்கள் தேர்வு முடிகளை https://tnresults.nic.in/ https://results.digilocker.gov.in/ என்ற இணையதள முகவரிகளில் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments