வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாகும் இரு காற்றழுத்தத் தாழ்வு!
வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாவது பற்றி..
வங்கக்கடலில் அடுத்தடுத்து இரண்டு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 16ல் தொடங்கியது. இதன்பிறகு உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது. இதையடுத்து உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி மோந்தா புயலாக மாறி ஆந்திரத்தில் கரையைக் கடந்தது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்தது.
இதையடுத்து, வடகிழக்குப் பருவமழை நவம்பர் மாதத்தில் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நவம்பர் 14-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, நவம்பர் 19-ம் தேதி அந்தமான கடல் பகுதியில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், வரும் நாள்களில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The India Meteorological Department has stated that two successive low-pressure areas are likely to form in the Bay of Bengal.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.