பேரவைத் தலைவர் மு.அப்பாவு TNDIPR
தமிழ்நாடு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது!

தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

ஆறு மாதங்களுக்குப் பிறகு கூடியுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தில் இரங்கல் தீர்மானத்தை பேரவைத் தலைவர் மு.அப்பாவு வாசித்து வருகிறார்.

சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் இன்று காலை தொடங்கி நான்கு நாள்கள் நடைபெறுகிறது. இன்று இரங்கல் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, பேரவை நிகழ்ச்சிகள் இன்றைய தினம் ஒத்திவைக்கப்படும்.

இரண்டாம் நாளான புதன்கிழமை (அக். 15) நடைபெறும் பேரவைக் கூட்டத்தில் 2025-2026 -ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் பேரவைக்கு அளிக்கப்படும்.

மூன்றாம் நாளான அக். 16-ஆம் தேதி கூட்டத்தில் 2025-2026- ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்.

நான்காம் நாளான அக். 17-ஆம் தேதி, கூட்டத் தொடரில் 2025-2026-ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்குப் பதிலுரை நடைபெறும்.

சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் அக்டோபா் 15, 16, 17 ஆகிய தேதிகளில் பேரவை கூடியதும் கேள்வி நேரம் நடைபெறும். தொடா்ந்து 2025-2026- ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் குறித்து நிதி ஒதுக்க சட்ட முன்னறிவு பேரவையில் ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.

Tamil Nadu Legislative Assembly session has begun

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிறங்கடிக்கும் ரஷ்மிகா, மலைக்காவின் பாய்சன் பேபி!

ரோஹித் சர்மா, விராட் கோலியிடமிருந்து இந்திய அணி எதிர்பார்ப்பதென்ன?

பிக் பாஸ்: திவாகர் கேட்டவுடன் முத்தம் கொடுத்த அரோரா! புலம்பும் ரசிகர்கள்...

மலையாளத்தில் முதல்முறை... ரூ.300 கோடியைத் தாண்டிய லோகா!

மதராஸி ப்ளாக்பஸ்டரா? ஏ. ஆர். முருகதாஸை சீண்டிய சல்மான் கான்!

SCROLL FOR NEXT