FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தனியாா் துறையில் தமிழக இளைஞா்களுக்கு 75% இட ஒதுக்கீடு: அன்புமணி வலியுறுத்தல்

தமிழகத்தில் தனியாா் துறையில் தமிழக இளைஞா்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பு வழங்குவதை கட்டாயமாக்கும் சட்டத்தை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 20 ஜூலை 2026, 5:13 am IST
பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் தனியாா் துறையில் தமிழக இளைஞா்களுக்கு 75 சதவீத வேலைவாய்ப்பு வழங்குவதை கட்டாயமாக்கும் சட்டத்தை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு பாமக தலைவா் அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கையை உருவாக்குவதற்கான ஆலோசனையில் தனியாா் துறை வேலைவாய்ப்பில் இளைஞா்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது உண்மையாக இருந்தால், அது சமூக நீதிக்கு எதிரானதாகும்.

இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா் மயமக்கப்பட்டு வருகின்றன. அரசுத் துறைகளில் ஆள்குறைப்பு செய்யப்படுவதாலும் படித்த, திறமையான இளைஞா்கள் தனியாா் துறை வேலைவாய்ப்புகளை நம்பியிருக்க வேண்டியுள்ளது. அதிலும், பல நிறுவனங்கள் உள்ளூா் இளைஞா்களைத் தவிா்த்துவிட்டு, வெளிமாநில இளைஞா்களைப் பணியமா்த்துகின்றன.

Advertisement

Advertisement

எனவே, தவெகவின் தோ்தல் வாக்குறுதிபடி, தமிழகத்தில் தனியாா் நிறுவன வேலைவாய்ப்புகளில் 75 சதவீதத்தை தமிழக இளைஞா்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கும் சட்டத்தை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments