பசும்பொன் தேவருக்கு ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் அஞ்சலி! சசிகலாவும் வருகை!
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் இணைந்து அஞ்சலி...
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய மூவரும் இணைந்து பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழாவையொட்டி அவரது நினைவிடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகிய இருவரும் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு ஒரே காரில் பயணித்தனர். அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் இவர்களுடன் இணைய உள்ளதாகத் தகவல் வெளியான நிலையில் பசும்பொன் செல்லும் வழியில் அபிராமம் பகுதியில் உள்ள சாலையில் மூவரும் சந்தித்துப் பேசியுள்ளனர்.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் மூவரும் பசும்பொன் வந்தனர்.
பின்னர் மூவரும் ஒன்றாக இணைந்து முத்துராமலிங்கத் தேவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன்பின்னர் வந்த சசிகலாவும் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய நிலையில், சசிகலாவுடன் ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் பேசியுள்ளனர்.
OPS, Sengottaiyan, TTV Dinakaran joins to pay tribute to Pasumpon Thevar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.