தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றுள்ளது பற்றி...
தமிழகத்தில் பேரவைத் தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது.
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கான பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக வருகிற ஏப். 23 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30 ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் 573 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. முதல்வர் மு.க. ஸ்டாலின், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், தவெக தலைவர் விஜய் மற்றும் அமைச்சர்கள், முக்கிய அரசியல் பிரமுகர்கள் முதல் நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
Advertisement
Advertisement
இதில் மார்ச் 31, ஏப். 1, 3, 5 ஆகிய தேதிகள் அரசு விடுமுறை நாள்கள் என்பதால் மார்ச் 30, ஏப். 2, 4, 6 ஆகிய 4 நாள்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல் நடைபெற்றன.
அதன்படி இன்றுடன்(ஏப். 4) வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. கடைசி நாளான இன்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், ஓபிஎஸ், துரைமுருகன், வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இன்று தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி(மாலை 3.45 மணி) 4,400 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் தொடர்ந்து இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் வேட்புமனு தாக்கல் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்புமனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 7-ஆம் தேதி நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் ஏப்ரல் 9-ஆம் தேதி ஆகும். ஏப்ரல் 23-இல் வாக்குப் பதிவு நடைபெறும். மே 4 வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Filing of Nominations Concludes in Tamil Nadu for assembly elections
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.