FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ராமதாஸ் பெயர், படத்தை பயன்படுத்த அன்புமணிக்குத் தடை!

ராமதாஸ் படத்தை பயன்படுத்த அன்புமணி தரப்பினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து...

Updated On : 21 ஏப்ரல் 2026, 7:50 pm IST
அன்புமணி / ராமதாஸ் - கோப்புப் படம்
பகிர்:

பாமக நிறுவனர் ராமதாஸ் படத்தை பயன்படுத்த அன்புமணி தரப்பினருக்கு தடை விதித்து சென்னை சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவு வரும் காலத்திற்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டு அடுத்தகட்ட விசாரணையை ஜூன் 4 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

ராமதாஸ் பெயரையும் படத்தையும் கொடியையும் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனக் கோரி ராமதாஸ் தரப்பில் இருந்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இந்த மனுவின் மீதான விசாரணை சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில், ராமதாஸ் தொடர்ந்த இடைக்கால மனுக்களை தள்ளுபடி செய்தது.

இதனையடுத்து சென்னை 13 வது உரிமையியல் நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், அன்புமணி ராமதாஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்றும் தனக்கும் அன்புமணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் பாமக தலைவராக சட்ட விரோதமாக அன்புமணி ராமதாஸ் நீடித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் பிரசாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை அன்புமணி தரப்பு வேட்பாளர்கள் 18 பேரும் பயன்படுத்தக்கூடாது என தடை விதிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அன்புமணி தரப்பினர், பாமக நிறுவனர் ராமதாஸ் பெயரையும் படங்களையும் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

summary

Anbumani Banned from Using Ramadoss's Name and Image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments