சாதி, மதமற்றோர் சான்று: நடிகர் பார்த்திபன் மனு மீது அரசு பதிலளிக்க உத்தரவு
சாதி, மதமற்றோர் சான்று: நடிகர் பார்த்திபன் வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு
சாதி, மதமற்றோர் என்று சான்றளிக்கக் கோரி நடிகர் பார்த்திபன் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாதி, மதமற்றவர் என சான்று பெற விரும்புவோருக்கு, உடனடியாக அந்த வகையான சான்று வழங்க இதுவரை சட்டத்தில் வழிவகை இல்லை. எனவே, அதுபோன்று கோருவோருக்கு உடனடியாக சான்றிதழ் வழங்க வழி வகை செய்யும் சட்டத்தை இயற்றக் கோரி தமிழக அரசுக்கு உத்தரவிடுமாறு இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் சென்னை உயர் நீதிமன்றத்தில பொது நல வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
Advertisement
Advertisement
நடிகர் பார்த்திபன் தொடர்ந்த பொது நலன் மனுவை விசாரித்த நீதிபதி, மனு மீது தமிழக அரசு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
சாதி, மதமற்றவர் என்று சான்றிதழ் பெற விரும்புவோருக்கு அதற்குரிய சட்டம் இயற்றுவது பெரிய நிவாரணமாக இருக்கும் என பார்த்திபன் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, சாதி, மதமற்றவர் என்று தனக்கு சான்றிதழ் தர வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, சாதி, மதமற்றவர் என்கிற சான்றிதழை நடிகர் பார்த்திபன் பெற்றிருந்தார்.
அதன்பிறகுதான், அவ்வாறு சான்றிதழ் பெற வேண்டும் என்றால், ஒவ்வொருவரும் நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டும் என்ற எண்ணத்தில், அதற்குரிய சட்டத்தை இயற்றினால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற இந்த பொது நலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
Certificate for no caste religion: Court orders govt
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.