சாதி, மதமற்றவர் சான்றிதழ் விவகாரம்: தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி நடிகர் பார்த்திபன் வழக்கு!
சாதி, மதமற்றவர் சான்றிதழ் விவகாரத்தில் நடிகர் பார்த்திபன் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருப்பது பற்றி...
சாதி, மதமற்றவர் சான்றிதழ் விவகாரத்தில் பார்த்திபன் தாக்கல் செய்த பொதுநல மனு உயர்நீதிமன்றத்தில் ஆக.3ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
சாதி, மதமற்றவர் என சான்று பெற விரும்புவோருக்கு உடனடியாக வழங்கும் வகையில் சட்டம் இயற்றக்கோரி இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் சென்னை உயர்நிதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக பார்த்திபன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சாதி மதமற்றவர் என சான்றிதழ் பெற விரும்புவோருக்கு உடனே சான்று வழங்க சட்டம் இயற்ற உத்தரவிட வேண்டும் என்றும் உத்தரவுகள் ஏதும் இல்லாததால் புதிதாக சட்டம் இயற்றுவது பெரிய நிவாரணமாக அமையும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி கடந்த ஏப்ரல் மாதம் ‘சாதி, மதமற்றவர்’ என்கிற சான்றிதழை நடிகர் பார்த்திபன் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
The Public Interest Litigation (PIL) filed by Parthiban regarding the 'No Caste, No Religion' certificate issue will come up for hearing in the High Court on August 3.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.