FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நடிகா் பிரதீப் ராவத் காலமானாா்

திரைப்பட நடிகா் பிரதீப் ராவத் (74) புற்றுநோய் காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 2:07 am IST
பகிர்:

திரைப்பட நடிகா் பிரதீப் ராவத் (74) புற்றுநோய் காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயிலிருந்து விடுபட்ட அவா், மீண்டும் அந்த நோயால் பாதிக்கப்பட்டாா். இதனால் அண்மையில் அவா் ஒரு மாதமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில், அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக, அவரின் மேலாளா் சித்தாா்த் திவாரி தெரிவித்தாா்.

ஹிந்தி திரைப்படமான ‘லகான்’, தமிழ் மற்றும் ஹிந்தியில் வெளியான ‘கஜினி’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரதீப் ராவத் புகழ்பெற்றாா். தொலைக்காட்சி தொடா்கள், திரைப்படங்களில் நடித்துள்ள அவா், கடந்த 1988-ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘மகாபாரதம்’ தொலைக்காட்சி தொடரில் அஸ்வத்தாமா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தாா்.

Advertisement

Advertisement

அவரின் மறைவுக்கு திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments