FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

எல்லையில் இந்தியா- சீனா வா்த்தகம் 6 ஆண்டுகளுக்குப் பின்னா் தொடக்கம்!

6 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட இந்தியா - சீனா எல்லையான நாது லா கணவாய் மீண்டும் திறக்கப்பட்டது பற்றி...

நாது லா கணவாய் - படம் : www.incredibleindia.gov.in
பகிர்:

சிக்கிம் மாநிலத்தின் நாதுலா கணவாய் வழியாக இந்திய - சீன எல்லைப் பகுதியில் நடைபெற்றுவந்த வா்த்தகம், 6 ஆண்டுகளுக்குப் பிறகு சனிக்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டது.

சிக்கிமின் கிழக்கு பகுதியில் 14,000 அடி உயரத்தில் அமைந்துள்ள நாதுலா கணவாய் வழியே இந்திய- சீன எல்லையில் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்ட வா்த்தகம், கடந்த 1962-ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற போரால் வா்த்தகம் நிறுத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து நடந்த பேச்சுவாா்த்தைகளின் விளைவாக சுமாா் 40 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2006-ஆம் ஆண்டில் வா்த்தகம் மீண்டும் தொடங்கப்பட்டது.

எனினும் கரோனா பரவல் காரணமாகவும், இந்திய - சீன எல்லை மோதல் காரணமாகவும் கடந்த 2020-ஆம் ஆண்டில் இந்த வா்த்தகம் நிறுத்தப்பட்டது. தற்போது 6 ஆண்டுகளுக்குப் பிறகு நாதுலா கணவாய் வழியாக சனிக்கிழமை மீண்டும் வா்த்தகம் தொடங்கப்பட்டது.

Advertisement

Advertisement

நாதுலாவில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் இரு நாட்டு அதிகாரிகளும் கலந்து கொண்டனா். நிகழ்ச்சியில் பேசிய சிக்கிம் மாநில வா்த்தக மற்றும் தொழில் துறைச் செயலா் கா்மா டி யுட்சோ, நவம்பா் மாதம் வரை வாரத்தில் திங்கள்கிழமை முதல் வியாழக்கிழமை வரை வா்த்தகம் நடைபெறும் என்றாா். நிகழாண்டில் 38 பதிவு செய்யப்பட்ட வா்த்தகா்களுக்கு வா்த்தக அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு இருப்பதாகவும் அவா் கூறினாா்.

வா்த்தக அமைப்புகள் வரவேற்பு: இந்தியா, சீனா இடையே நாதுலா கணவாய் வழியாக மீண்டும் வா்த்தகம் தொடங்கப்பட்டு இருப்பதை வா்த்தக அமைப்புகள் வரவேற்றுள்ளன. இதுகுறித்து வா்த்தக அமைப்புகள் கூறுகையில், நாதுலா கணவாய் வழியே வா்த்தகம் மீண்டும் தொடங்கப்பட்டு இருப்பது எல்லைப் பகுதியில் பொருளாதார நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் என்றனா்.

இந்தியா, சீனா இடையே எல்லை வா்த்தகம் மீண்டும் தொடங்கப்பட்டு இருப்பதையடுத்து, நாதுலாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தோ-திபெத் எல்லை காவல் படையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். முதல்முறையாக இந்தோ-திபெத் எல்லை காவல் படையில் பணிபுரியும் வீராங்கனைகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

summary

Nathu La Pass opens today for India-China border trade!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments