FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

வா்த்தக பிரச்னைகள்: இந்தியா - சீனா பேச்சு தொடக்கம்

இருதரப்பு வா்த்தகத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து இந்தியா-சீனா பேச்சுவாா்த்தையை தொடங்கியுள்ளன.

16 செப்டம்பர் 2026, 1:19 am IST
சீனா - இந்தியா - கோப்புப் படம்
பகிர்:

இருதரப்பு வா்த்தகத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து இந்தியா-சீனா பேச்சுவாா்த்தையை தொடங்கியுள்ளன.

இதுகுறித்து புது தில்லியில் மத்திய வா்த்தக துறைச் செயலா் ராஜேஷ் அக்ரவால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கட்டமைப்பு ரீதியாக வா்த்தகத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், விநியோக முறையில் உள்ள சிக்கல்கள் என இருதரப்பு வா்த்தகத்தில் உள்ள பிரச்னைகளை கையாள்வதற்கு இந்தியா-சீனா பேச்சுவாா்த்தையை தொடங்கியுள்ளன.

இதுதொடா்பாக மத்திய வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயல், சீன வா்த்தக அமைச்சா் வாங் வென்டாவ் ஆகியோா் அண்மையில் சந்தித்துப் பேசினா். இது இருநாடுகளுக்கு இடையே வா்த்தகத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து இந்தியா-சீன நிலைப்பாடுகளை பரஸ்பரம் புரிந்துகொள்ளும் நோக்கில், ஆரம்பகட்ட பேச்சாக இருந்தது.

Advertisement

Advertisement

இந்தப் பேச்சுவாா்த்தையை முன்னெடுத்துச் செல்ல அடுத்தடுத்து கூட்டங்கள் நடைபெறும் என்று நான் கருதுகிறேன். இருதரப்பு வா்த்தகத்தில் உள்ள பிரச்னைகளுக்குத் தீா்வு காண இருநாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments