கைது நடவடிக்கையை காமெடியாக பார்கிறேன்! உதயநிதி ஸ்டாலின்
காவல்துறையினர் கைது நடவடிக்கை குறித்து உதயநிதி ஸ்டாலின் பேட்டி...
கைது நடவடிக்கையை காமெடியாக பார்ப்பதாக தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக தவெக அரசைக் கண்டித்து தஞ்சாவூரில் திமுக சார்பில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் விஜய் மற்றும் பெண்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இழிவாகப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் உதயநிதி மீது தவெக மகளிரணியினர், தஞ்சாவூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் அவர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து, சென்னை நீலாங்கரை வீட்டிலுள்ள உதயநிதி ஸ்டாலினை கைது செய்வதற்காக தஞ்சாவூர் போலீசார், சென்னை போலீசாருடன் வந்துள்ளனர்.
இதனிடையே, உதயநிதி ஸ்டாலினை கைது செய்யத் தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பகல் 12 மணி வரை கைது நடவடிக்கை கூடாது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால், விசாரணைக்காக உதயநிதி ஸ்டாலினை கைது செய்து தஞ்சாவூருக்கு போலீஸ் வாகனம் மூலம் அழைத்துச் செல்கின்றனர்.
காவல்துறை வாகனத்தில் ஏறிய உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுடன் பேசுகையில்,
“என் மீதான கைது நடவடிக்கையை காமெடியாகப் பார்க்கிறேன். நான் பேசாததை கட், காபி, பேஸ்ட் செய்தி பரப்புகிறார்கள். டம்மி முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் ரீல்ஸ் மோகத்தில் செயல்படுவதை போராட்டத்தில் பேசினேன். எதாவது பிரச்னை நடந்தால் அதை திசைத் திருப்ப முயற்சிக்கிறது தவெக அரசு” எனத் தெரிவித்தார்.
I view the arrest action as a comedy! – Udhayanidhi Stalin
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.