வைகோ புத்தகத்தை வெளியிட்ட ராகுல்! இந்தியா கூட்டணித் தலைவர்களுடன் தவெக அமைச்சர்!
மதிமுக பொதுச் செயலர் வைகோ புத்தகத்தை ராகுல் காந்தி வெளியிட்டது பற்றி...
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எழுதிய புத்தகத்தை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.
நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வைகோ ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க உரைகளின் தொகுப்பான ‘நாடாளுமன்றத்தில் வைகோ’ (Vaiko in Parliament) என்ற புத்தகம் இன்று வெளியிடப்பட்டது.
தில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற ராகுல் காந்தி, புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
Advertisement
Advertisement
இந்த நிகழ்வில், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலர் டி. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச் செயலர் எம்.ஏ. பேபி, விசிக தலைவர் திருமாவளவன், தேசியவாத காங்கிரஸின் சுப்ரியா சுலே உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இவர்களுடன் தவெக சார்பில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்றுள்ளார்.
திமுக கூட்டணியிலிருந்து விலகிய மதிமுக, தவெகவுக்கு ஆதரவளித்த நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யை நேரில் சந்தித்து புத்தக வெளியீட்டு விழாவுக்கு வைகோ அழைப்பு விடுத்திருந்தார்.
இந்த விழாவில், முதல்வர் விஜய் பங்கேற்க முடியாத காரணத்தால், அவரின் பிரதிநிதியாக அமைச்சர் ராஜ்மோகன் கலந்துகொண்டுள்ளார்.
இதனிடையே, விழா மேடையில் ராகுல் காந்தியுடன் அகிலேஷ் யாதவ் மற்றும் விஜய் இருக்கும் புகைப்படம் வைக்கப்பட்டிருப்பது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.
இந்தியா கூட்டணியிலிருந்து திமுக விலகியதை அடுத்து, அந்த கூட்டணியில் தவெகவை இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் பரவிய நிலையில், ராஜ்மோகனின் பங்கேற்பும், முதல்வர் விஜய்யின் புகைப்படமும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Rahul releases Vaiko's book - TVK minister with INDIA bloc leaders!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.