FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

'வெற்றி' தமிழக அரசின் திட்டங்களில் இடம்பெற்ற புதிய சொல்! பட்ஜெட் 2026!

பட்ஜெட் 2026- தமிழக அரசின் திட்டப் பெயர்களில் வெற்றி என்ற புதிய சொல் இடம்பெற்றுள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 12:08 pm IST
பட்ஜெட் 2026
பகிர்:

2026 - 27ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட், பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. தமிழக நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அனைத்து திட்டங்களின் பெயர்களிலும் வெற்றி என்ற வார்த்தை சேர்க்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு, புதிய திட்டங்கள் அறிமுகம், ஏற்கனவே செயல்படுத்தும் திட்டங்களின் மேம்படுத்தப்பட்ட அறிவிப்பு உள்ளிட்டவை வெளியாகியிருக்கிறது.

அதில், தமிழக அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள திட்டங்கள், ஏற்கனவே முந்தைய அரசுகளால் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருந்த திட்டங்களின் பெயர்களில் வெற்றி என்ற வார்த்தை இணைக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் தவெக அரசு ஆட்சியமைத்த பிறகு, ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வந்த பல்வேறு திட்டங்களின் பெயர்களையும் மாற்றியமைத்து வந்தது. ஆனால், தற்போது ஒன்றுபோல அனைத்துத் திட்டங்களுக்கும் வெற்றி என்ற திட்டப் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த பட்ஜெட்டில் பத்து தூண்களைக் கொண்ட வெற்றித் தமிழகம் - தொலைநோக்குத் திட்டங்கள் ஆவணத்தினை வெளியிட்டுள்ளது. இதன்படி பல்வேறு திட்டங்கள் செயல்வடிவம் கொடுத்து, தமிழகம் வறுமையில்லாத செழுமை மிக்க மாநிலமாக மாற்றப்பட்டு, 2036-ஆம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாகவும் மாற்றவும் தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது.

மேலும், மாணவர்களுக்கான மடிக்கணினித் திட்டம் தற்போது வெற்றி மடிக்கணினித் திட்டம் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளித்து வேலை வாய்ப்புக்குத் தகுதியுடையவர்களாக மாற்றும் திட்டத்துக்கு வெற்றித் திறன் பயிற்சித் திட்டம்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வெற்றி தொழில் முனைவோர் திட்டம் செயல்படுத்தப்படும்.

ஊரகப் பகுதிகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது உள்ளிட்ட அறிவிப்புகளில் வெற்றி என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.

இதுபோல வெற்றி வீடு திட்டம் போன்றவையும் இடத்தில் இணைந்துள்ளது.

வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தினை துணை திட்டமாக வெற்றி 150 திட்டத்துக்கும் வெற்றி 150 என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments