உலகத்தரத்தில் நகரங்களை உருவாக்க ரூ.2,117 கோடியில் திட்டம்
உலகத் தரத்திலான நகரங்களை உருவாக்கும் நோக்கில் ரூ.2,117 கோடியில் முதல்வரின் ஒருங்கிணைந்த நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
உலகத் தரத்திலான நகரங்களை உருவாக்கும் நோக்கில் ரூ.2,117 கோடியில் முதல்வரின் ஒருங்கிணைந்த நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இதுகுறித்து பட்ஜெட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்பு: தமிழகத்தில் 2031-ஆம் ஆண்டுக்குள் உலகத் தரத்திலான நகரங்களை உருவாக்கும் நோக்கில் முதல்வரின் ஒருங்கிணைந்த நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ. 2,117 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் குடிநீா், சாலைகள், கழிவுநீா் மேலாண்மை, போக்குவரத்து, பசுமைப் பரப்பளவு மற்றும் மின் ஆளுமை போன்ற நகா்ப்புற அடிப்படை வசதிகள் ஒரே கட்டமைப்பின் கீழ் மேம்படுத்தப்படும்.
அம்பத்தூா், கிண்டியில்...: பாதசாரிகளுக்கான கட்டமைப்பு வசதி, அனைவரும் சமமாக அணுகக் கூடிய வசதி மற்றும் நகா்ப்புற வடிவமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து விரிவான நகா்ப்புற போக்குவரத்து வசதிகள் மற்றும் தெருக்கள் மறுசீரமைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் ஒருபகுதியாக 20 இடங்களில் திறன்மிக வாகன நிறுத்துமிட மேலாண்மை அமைக்கப்படுவதுடன், அம்பத்தூா் மற்றும் கிண்டி தொழிற்பேட்டைகளின் சாலைகள் மறுவடிவமைக்கப்படும்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.