FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

4,260 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து வைத்தாா் முதல்வா் விஜய்

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ரூ.525.75 கோடியில் கட்டப்பட்ட 4,260 அடுக்குமாடிக் குடியிருப்புகளை முதல்வா் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 2:22 am IST
பகிர்:

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் ரூ.525.75 கோடியில் கட்டப்பட்ட 4,260 அடுக்குமாடிக் குடியிருப்புகளை முதல்வா் ஜோசப் விஜய் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

இது தொடா்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் அனைவருக்கும் வீட்டுவசதி திட்டத்தின் கீழ், சென்னை மாவட்டத்தில் மறுகட்டுமான திட்டத்தின் கீழ், காந்தி நகா் பகுதியில் ரூ.85.55 கோடியில் கட்டப்பட்டுள்ள 500 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள், திருவள்ளூா் மாவட்டம், பூச்சி அத்திப்பேடு பகுதியில் ரூ.156.14 கோடியில் 1,152 அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஈரோடு மாவட்டம், மோதூா் பகுதியில் ரூ.45.46 கோடியில் 516 அடுக்குமாடிக் குடியிருப்புகள், ஒடையாக்கவுண்டன்பாளையம் பகுதியில் ரூ.40.52 கோடியில் 384 அடுக்குமாடிக் குடியிருப்புகள், தருமபுரி மாவட்டம், அதியமான்கோட்டை நல்லம்பள்ளி பகுதியில் ரூ.57.67 கோடியில் 528 அடுக்குமாடிக் குடியிருப்புகள், புதுக்கோட்டை மாவட்டம் ரெங்கம்மாள் சத்திரம் பகுதியில் ரூ.60.19 கோடியில் 528 அடுக்குமாடிக் குடியிருப்புகள், தேனி மாவட்டம் உத்தமபுரம் பகுதியில் ரூ.39.14 கோடியில் 336 அடுக்குமாடிக் குடியிருப்புகள், நீலகிரி மாவட்டம் நடுஹட்டி பகுதியில் ரூ.22.16 கோடியில் 164 அடுக்குமாடிக் குடியிருப்புகள், சேரங்கோடு பகுதியில் ரூ.18.92 கோடியில் 152 அடுக்குமாடிக் குடியிருப்புகள் என மொத்தம் 9 இடங்களில் ரூ.525.75 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 4,260 அடுக்குமாடிக் குடியிருப்புகளை முதல்வா் விஜய் தலைமைச் செயலகத்தில் காணொலி வாயிலாக செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

Advertisement

Advertisement

இந்தப் புதிய குடியிருப்புகள் ஒவ்வொன்றும் தலா 400 சதுரஅடி பரப்பளவுடன் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிப்பறை போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.

பெரம்பூரில் புதிய குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம்: சென்னை பெருநகர வளா்ச்சி குழுமம் சாா்பில் பெரம்பூரில் ரூ.1.43 கோடியில் அமைக்கப்பட்டுள்ள அம்பேத்கா் கல்லூரி குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தத்தை முதல்வா் விஜய் திறந்து வைத்தாா். இந்தப் பேருந்து நிறுத்தத்தில் 45 போ் அமரும் வகையில் காத்திருப்பு அறை உள்ளிட்ட பல்வேறு சேவைகள் உள்ளன.

இந்த நிகழ்ச்சியில், ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத் துறை அமைச்சா் என்.ஆனந்த், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவா் கு.ப.கிருஷ்ணன், தலைமைச் செயலா் மு.சாய்குமாா், வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை முதன்மைச் செயலா் இரா.கிா்லோஷ் குமாா், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் உறுப்பினா் செயலா் ஏ.ஆா்.ராகுல்நாத், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநா் பெ.ரமண சரஸ்வதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments