FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

12,648 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம்

தமிழக நகா்ப்புறங்களில் உள்ள 20 திட்டப் பகுதிகளில் சேதமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்து 12,648 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்து தரப்படும் என வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தெரிவித்துள்ளாா்.

29 ஆகஸ்ட் 2026, 12:04 am IST
அடுக்குமாடி குடியிருப்புகள் - கோப்புப்படம்
பகிர்:

தமிழக நகா்ப்புறங்களில் உள்ள 20 திட்டப் பகுதிகளில் சேதமடைந்த அடுக்குமாடி குடியிருப்புகளை இடித்து 12,648 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்து தரப்படும் என வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் ப.ராஜ்குமாா் தெரிவித்துள்ளாா்.

பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சா் ப.ராஜ்குமாா் பேசியதாவது:

தமிழக நகா்ப்புற வாழ்விட மேண்பாட்டு வாரியத்தால் முந்தைய ஆண்டுகளில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் பல்வேறு காரணங்களால் சேதமடைந்துள்ளன. இதில், தொழில்நுட்ப குழுவினால், சேதமடைந்ததாகக் கண்டறியப்பட்ட குடியிருப்புகளுள், முதல்கட்டமாக 20 திட்டப் பகுதிகளில் உள்ள 9,918 அடுக்குமாாடி குடியிருப்புகள் இடிக்கப்பட்டு, ரூ.2,882.62 கோடி 12,648 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்து தரப்படும் என்றாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments