கோவை வணிக வளாகத்தில் ஹெல்மெட் திருடும் காதலர்கள்! அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி!
கோவை வணிக வளாகத்தில் காதலர்கள், ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற சம்பவம் பற்றி...
கோவையில் தனியார் வணிக வளாகத்திற்கு பொருள்கள் வாங்குவதுபோல வந்து, யாரும் இல்லாத நேரத்தில் பார்க்கிங்கில் உள்ள ஹெல்மெட்டை காதலர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த ஹைப்பர் மார்க்கெட்க்கு தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் தான் புதியதாக வாங்கிய தலைக்கவசத்துடன் சென்ற இளைஞர் ஒருவர், தனது வாகனத்தை, வாகன நிறுத்தும் இடத்தில் நிறுத்திவிட்டு தலைக்கவசத்தை பூட்டாமல் பொருள்கள் வாங்குவதற்காக உள்ளே சென்றுள்ளார்.
Advertisement
Advertisement
சற்று நேரத்தில் திரும்பி வந்து பார்த்தபொழுது அவரது இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த தலைக்கவசம் காணாமல் போயிருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து தொடர்ந்து ஹைப்பர் மார்க்கெட்டில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை இளைஞர் ஆய்வு செய்துள்ளார்.
அப்பொழுது அதில் கண்ட காட்சி அவருக்கு திடுக்கிட செய்துள்ளது.
பொருள்கள் வாங்குவதுபோல டிப்டாப் உடையில் வந்த காதல் ஜோடி, அங்கு வைக்கப்பட்டு இருந்த பல்வேறு தலைக்கவசங்களை நோட்டமிட்டு அதில் மிகவும் புதியதாக நல்லதாக இருப்பதை பார்த்து வைத்து விட்டு, சுற்றி முற்றியும் யாரும் வருகிறார்களா? என்று சோதனை செய்து பின்னர் ஆள்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதை உணர்ந்து, ஹைப்பர் மார்க்கெட் உள்ளே சென்று மீண்டும் திரும்புகின்றனர்.
பின்னர் ஏற்கனவே அவர்கள் தேர்வு செய்து வைத்திருந்த ஹெல்மட்டை திருடுவதற்காக அந்த வாகனத்தின் அருகே சென்ற அந்த நபர், தலையை சீவுவதுபோல கண்ணாடியை பார்த்துவிட்டு யாரும் பார்க்காத நேரத்தில் விலை உயர்ந்த தலைக்கவசத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து இருவரும் சென்று விட்டனர்.
இதனைக் கண்ட இளைஞர் அதிர்ச்சியுடன் அந்த காட்சிகளைக் கொண்டு ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தலைக்கவசத்தை திருடும் காதலர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
காதலர்கள் ஹெல்மெட் திருடும் விடியோ காட்சிகள் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Couple steals a helmet from a Coimbatore shopping complex
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.