FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

‘வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி உச்சிகுளிர பாராட்டு மழை’ - மு.க. ஸ்டாலின் விமர்சனம்

வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை பொழிந்துள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளதைப் பற்றி...

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 1:04 pm IST
முதல்வர் விஜய் - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - (கோப்புப் படம்)
பகிர்:

வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டு மழை பொழிந்துள்ளதாக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சரை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதல்வரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை 2026.

Advertisement

Advertisement

மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது. திராவிட மாடல் அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா?

திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் பதிவு.

குறுவை சாகுபடி பாதித்து அரசின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது. உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த குரலில் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் கழக உறுப்பினர்கள் எழுப்புவார்கள். உறக்கத்தில் இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும். தீர்வு கிடைக்க வேண்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

summary

DMK leader M.K. Stalin has criticized Chief Minister Vijay and a minister for showering praise on the Chief Minister to his great delight, instead of addressing the issue of drought.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments