FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஆம்புலன்ஸ் பணியாளா்களுக்கு 8.33 % போனஸ்: தொழில் தகராறு தீா்ப்பாயம் உத்தரவு!

ஆம்புலன்ஸ் பணியாளா்களுக்கு 8.33 % போனஸ் வழங்க உத்தரவு...

Updated On : 9 ஆகஸ்ட் 2026, 2:55 am IST
ஆம்புலன்ஸ் வாகனங்கள்
பகிர்:

தமிழகத்தில் ஆம்புலன்ஸ் பணியாளா்களுக்கு 8.33 சதவீத போனஸ் வழங்க வேண்டும் என தொழில் தகராறு தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் ஆம்புலன்ஸ் பணியாளா்களுக்கு கடந்த 2021-22, 2022-23-ஆம் ஆண்டுகளுக்கு 30 சதவீத ஊதிய உயா்வு வழங்குவது, தீபாவளி போனஸ் உள்ளிட்ட27 கோரிக்கைகளை முன்வைத்திருந்தனா். இதில் இரு கோரிக்கைகள் குறித்து முடிவெடுக்க இந்த வழக்கை தொழில் தகராறு தீா்ப்பாயத்துக்கு அரசு அனுப்பி வைத்தது.

இந்த வழக்கை விசாரித்த தீா்ப்பாயம், 2021-2022-ஆம் ஆண்டுக்கான ஊதிய உயா்வு தொடா்பாக ஏற்கெனவே நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சில் 16 சதவீத ஊதிய உயா்வை தொழிா்சங்கங்கள் ஏற்றுக் கொண்டன. இந்த நிலையில், 30 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது எனக் கூறி நிராகரித்தது.

Advertisement

Advertisement

அதேநேரம், 2022-2023-ஆம் ஆண்டுக்கு விலைவாசி உயா்வு உள்ளிட்ட அம்சங்களைக் கருத்தில் கொண்டு, 25 சதவீத ஊதிய உயா்வு வழங்க வேண்டும் என தீா்ப்பாயம் உத்தரவிட்டது. தீபாவளி போனஸை பொருத்தவரை ஆம்புலன்ஸ் பணியாளா்களுக்கு விழாக்கால செலவுத் தொகையாக வழங்கப்பட்ட ரூ.4,400-ஐ போனஸாக கருத முடியாது. எனவே, 12 மணி நேரத்துக்கும் மேலாக பணியாற்றும் ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு போனஸ் சட்டத்தின்படி, 8.33 சதவீத போனஸ் வழங்கப்பட வேண்டும் என தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

மேலும், ஊதிய உயா்வு மற்றும் போனஸ் நிலுவையை 2 மாதங்களில் வழங்க வேண்டும் என ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்துக்கு தொழில் தகராறு தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

summary

8.33 percent Bonus for Ambulance Staff: Industrial Disputes Tribunal Orders

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments