FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தவெக ஆட்சியில் போலீசாரால் குற்றவாளிகள் அடித்துக் கொல்லப்படுவது அதிகரிக்கிறது: நயினார் நாகேந்திரன்

போலீசாரால் குற்றவாளிகள் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வருவதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளது பற்றி...

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 5:05 pm IST
விஜய் | நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:

தெவக தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து, போலீசாரால் குற்றவாளிகள் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வருவதாக பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சனிக்கிழமை (ஆக. 8) குற்றம் சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட வழக்கை திண்டுக்கல் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் கைதான வழக்குரைஞர் அன்வர்தீனுக்கு இன்று நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும் அதனால் அவர் உயிரிழந்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

பழனியில் ரூ. 100 கோடி நிலம் மோசடி செய்யப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த அன்வர்தீன் என்பவர் நெஞ்சுவலியின் காரணமாக திடீரென உயிரிழந்துவிட்டதாகவும், சார்பதிவாளர் மணிகண்டன் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியையும் பல்வேறு சந்தேகங்களையும் எழுகின்றன. முழு மருத்துவப் பரிசோதனைக்கு பின்னரே குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படும் பட்சத்தில், தவெக அரசின் மிகப்பெரும் ஊழலை அம்பலப்படுத்திய இவ்வழக்கின் குற்றவாளிக்கு மட்டும் எப்படி திடீரென நெஞ்சுவலி வரும்? அதிலும் இவ்வழக்கின் முக்கிய சாட்சியங்களாக கருதப்படும் இருவருக்கும் ஒரே நேரத்தில் எப்படி உடல்நலக்குறைவு ஏற்படும்?

தெவக தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றதில் இருந்து, காவல் நிலையங்களிலும் சிறைகளிலும் இருக்கும் குற்றவாளிகள் எல்லாம் அதிகாரிகளால் அடித்துக் கொல்லப்படுவது அதிகரித்து வரும் நிலையில், இந்த மரணத்தை இயற்கையான நிகழ்வு என்று கடந்து போக முடியவில்லை.

எனவே, அன்வர்தீன் உயிரிழந்தபோது பணியில் இருந்த அனைத்து சிறைக் காவல் அதிகாரிகளையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர வேண்டும்! இம்மரணத்தின் உண்மையான பின்னணி குறித்த முறையான விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட வேண்டும்! மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சார்பதிவாளர் மணிகண்டனுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கி, அவரை அரசு பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

நயினார் நாகேந்திரனின் எக்ஸ் பதிவு. - படம் - எக்ஸ்
summary

Tamil Nadu BJP State President Nainar Nagendran alleged on Saturday (Aug. 8) that incidents of criminals being beaten to death by the police have been on the rise since TVK leader Vijay assumed office as Chief Minister.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments