நீட் தேர்வு ரத்து! பேரவையில் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் அருண் ராஜ்!
நீட் தேர்வு ரத்து செய்யக் கோரி பேரவையில் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார் அமைச்சர் அருண் ராஜ்...
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரும் மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக. 11) தனித் தீா்மானமாக முன்மொழிந்துள்ளார் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண் ராஜ்.
2026-27ஆம் ஆண்டுக்கான பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-ஆவது நாளாக சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று நடவடிக்கைகளின்போது, நீட் தோ்வை திரும்பப் பெற்று மாநில மருத்துவப் பாட மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவா் சோ்க்கையை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தும் தனித் தீா்மானத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் அருண்ராஜ் தாக்கல் செய்து பேசினார்.
Advertisement
Advertisement
மசோதாவை தாக்கல் செய்து உரையாற்றிய அமைச்சர் அருண் ராஜ், மருத்துவக் கல்வி திறமை உள்ள அனைவருக்கும் வேண்டும், மருத்துவக் கல்வி என்பது வசதிபடைத்தவர்களுக்கானதாக இருக்கக் கூடாது. நீட் தேர்வுக்கு முன்பு, பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெற்றபோது, கிராமப்புற மாணவர்கள் மருத்துவம் பயின்றனர்.
நீட் தேர்வால் தனியார் பயிற்சி மையங்கள்தான் பயனடைந்தன. நீட் தேர்வு அதிக கட்டணம் வசூலிக்கும் பயிற்சி மையங்கள் பெருக வழிவகுத்தது.
நீட் தேர்வால் சமூக சமநிலை கட்டமைப்பு சீர்குலைந்துவிட்டது. ஒரு நாள் நடைபெறும் தேர்வு மாணவர்களின் எதிர்கார்த்தை தீர்மானிக்கிறது. எனவே, நீட் தேர்வை ரத்து செய்து மாநில அரசே மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கூறி தனித் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார்.
திமுக ஆட்சியில்..
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தோ்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை கடந்த 2021-இல் தமிழக சட்டப்பேரவை ஒருமனதாக நிறைவேற்றிய பின்பு, குடியரசுத் தலைவரால் அதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை.
தொடா் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளால் லட்சக்கணக்கான மாணவா்கள் பாதிக்கப்பட்டும், உயிரிழப்பு ஏற்பட்டும் நாடு முழுவதும் உள்ள மாணவா்களின் நம்பிக்கையை இந்தத் தோ்வு இழந்துள்ளது. ஆகையால், நீட் தோ்வை அகற்ற வேண்டும் என்று கோரி அமைச்சா் அருண்ராஜ் தனித் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.