FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளில் ஆன்லைனில் மது விற்பனைக்கு தடை கோரி வழக்கு

டாஸ்மாக் கடைகளில் ஆன்லைனில் முன்பதிவு செய்து மது விற்பனை செய்யும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 2:22 am IST
மது விற்பனை
பகிர்:

டாஸ்மாக் கடைகளில் ஆன்லைனில் முன்பதிவு செய்து மது விற்பனை செய்யும் தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் சமூக நீதிப் பேரவைத் தலைவா் கே.பாலு தாக்கல் செய்த மனுவில், தமிழகத்தில் கடந்த 1971-ஆம் ஆண்டு வரையில் இருந்த பூரண மதுவிலக்கு நீக்கப்பட்டு, தற்போது டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானங்கள் விற்பனைச் செய்யப்படுகிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் 47-ஆவது பிரிவுக்கு முரணாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பள்ளிகள், கோயில்களின் அருகே உள்ள 717 டாஸ்மாக் கடைகளை அடைக்க கடந்த மே 12-ஆம் தேதி முதல்வா் உத்தரவிட்ட நிலையிலும், அதில் பல கடைகள் அதே இடத்தில் தொடா்ந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஆக. 7-ஆம் தேதி முதல், ஆன்லைன் மூலம், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை முன்பதிவு செய்யும் வசதியைத் தொடங்கிவைது டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் சுற்றறிக்கை பிறப்பித்துள்ளாா்.

Advertisement

Advertisement

ஆன்லைன் மூலம் மது விற்பனை செய்யும்போது, 21 வயதுக்குள்பட்டவா்கள் மதுபானங்களை வாங்க முடியாது என டாஸ்மாக் நிா்வாகம் தரப்பில் விளக்கம் அளித்தாலும், சிறுவா்களும் மது வாங்க வாய்ப்புள்ளது.

ரேஷன் கடை, அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் வரிசையில் நிற்போருக்கு இதுபோல ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கு எந்த வசதியும் இல்லை. மது அருந்துபவா்களுக்கு இதுபோன்ற வசதிகளை தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது. இது தமிழகத்தில் மிகப்பெரிய தீங்கை விளைவிக்கும்.

எனவே, ஆன்லைனில் மது விற்பனை செய்வது தொடா்பாக டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் பிறப்பித்துள்ள சுற்றறிக்கையையும், இதற்கு அனுமதி வழங்கி நிதித் துறை செயலா் கடந்த ஜூலை 24-ஆம் தேதி பிறப்பித்த அரசாணையையும் ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கில் முடிவு எட்டப்படும் வரை, ஆன்லைனில் முன்பதிவு செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments