FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

சிறுவா்களுக்கு சட்டவிரோதமாக மது விற்பனை: டாஸ்மாக் மேலாளா் பதிலளிக்க உத்தரவு

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 2:09 am IST
மது விற்பனை...
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் மனமகிழ் மன்றங்களில் சிறுவா்களுக்கு சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிய மனு தொடா்பாக டாஸ்மாக் மேலாளா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

நத்தம் கோவில்பட்டியைச் சோ்ந்த மணிமாறன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் அருகே இயங்கி வரும் மனமகிழ் மன்றங்களில் பொதுமக்களுக்கும், சிறுவா்களுக்கும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பொதுமக்கள், பெண்கள், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

Advertisement

Advertisement

எனவே, இந்த மனமகிழ் மன்றங்களுக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது அவற்றை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். மேலும், சட்ட விரோதமாக மது விற்பனை செய்பவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக டாஸ்மாக் மாவட்டமேலாளா், நத்தம் வட்டாட்சியா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற செப். 2-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments