முதல்வர் விஜய்யின் ‘வெற்றித் தமிழ்நாடு’... இன்றைய நேரலை! (ஆக. 13)
இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...
சென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!
சென்னையில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் சி. ஜோசப் விஜய் இன்று தொடக்கிவைத்தார்.
ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
வெற்றித் தமிழ்நாடு மாநாட்டில் செய்யப்படவுள்ள முதலீட்டின் மூலமாக 1,06,998 வேலை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 நாட்களில் ஒரு லட்சம் கோடி முதலீடு!
முதல்வர் விஜய் தலைமையில் நடைபெறும் இன்றைய மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன்மூலம், ரூ. ஒரு லட்சம் கோடி அளவுக்கு முதலீடு கிடைக்கும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
‘வெற்றித் தமிழ்நாடு’
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்று, வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் நோக்கில் ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ இன்று சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.