FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் சி. ஜோசப் விஜய்

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 8:01 pm IST
முதல்வர் ஜோசப் விஜய் - (கோப்புப் படம்)
பகிர்:

வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டை ,முதல்வர் சி. ஜோசப் விஜய் நாளை(ஆக. 12) தொடக்கி வைக்கிறார்.

நாளை நடைபெறவுள்ள, வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக, முதல்வர் விஜய்யை, தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா இன்று சந்தித்துப் பேசியுள்ளார்.

இது தொடர்பாக தொழில் துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

Advertisement

Advertisement

”தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்யைச் சந்தித்து, நாளை‌ நடைபெறவுள்ள ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2026’ தொடர்பான பணிகளை விளக்கி, மாநாட்டைத் தொடங்கி வைத்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுத்தேன்.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், முதலீட்டாளர்கள், தொழில்துறை தலைவர்கள் மற்றும் மாற்றத்தை உருவாக்குபவர்கள் ஒன்றிணையும் முக்கிய தளமாக இம்மாநாடு அமையவுள்ளது.

தமிழ்நாட்டின் மீது உலக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தி, ஒவ்வொரு முதலீட்டையும் மக்களின் முன்னேற்றத்திற்கான வாய்ப்பாக மாற்றும் நமது பயணத்தில், ‘வெற்றி தமிழ்நாடு 2026’ ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Chief Minister C. Joseph Vijay will inaugurate the 'Vetri Tamil Nadu' Investors' Meet tomorrow (August 12).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments