தீபாவளிக்கு முன் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு!
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது குறித்து...
தீபாவளிக்கு முன் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என்று சென்னை கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் ஐ. செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சென்னை கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளர் ஐ. செந்தில்குமார் தெரிவித்ததாவது:
”கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பேருந்து நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
கிளாம்பாக்கம் புறநகர் ரயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தை பராமரிப்பது குறித்து தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு முன் அல்லது தீபாவளிக்கு பின் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டுக்கு வரும்” என்று அவர் தெரிவித்தார்.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தையொட்டி செல்லும் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு வழித்தடத்தில் புதிதாக ஒரு ரயில் நிலையம் அமைக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் ரயில்வே துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வண்டலூர்-ஊரப்பாக்கம் ரயில் நிலையம் இடையே 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் நிற்கும் வகையில் 3 நடைமேடைகளுடன் கூடிய ரயில் நிலையம் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
I. Senthilkumar, Additional Divisional Railway Manager (Chennai Division), has announced that the Kilambakkam railway station will become operational in time for Diwali.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.