FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

கோவையில் அடுக்குமாடி கட்டடம் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி!

கோவையில் அடுக்குமாடி கட்டடம் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்த சம்பவம் குறித்து...

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 11:54 am IST
கோவையில் அடுக்குமாடி கட்டடம் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி! - படம்: தினமணி
பகிர்:

கோவை மாவட்டம் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டடம் திடீரென குலுங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, குடியிருப்பில் இருந்த மக்களை காவல் துறையினர் வெளியேற்றினர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி கட்டடத்தில் திடீரென அசைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு தங்கியிருந்தவர்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த அடுக்குமாடி கட்டடத்தின் ஒரு பகுதி, ஏற்கனவே இரும்புக் கம்பிகள் மூலம் முட்டுக் கொடுக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக தங்க நகை தொழிலில் ஈடுபட்டு வரும் வடமாநில தொழிலாளர்கள் சிலர், இந்தக் கட்டடத்தில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இன்று(ஆக. 14) கட்டடத்தில் அசைவு ஏற்பட்டதாக அங்கு இருந்தவர்கள் தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், உடனடியாக கட்டடத்தை விட்டு வெளியேறினர்.

இது குறித்து, தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள், பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து, பொதுப்பணித்துறை அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து, கட்டடத்தின் நிலைத்தன்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், இந்த கட்டடத்திற்கு அருகிலேயே மற்றொரு அடுக்குமாடி கட்டடம் புதிதாக கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. கட்டடத்தில் ஏற்பட்டுள்ள அசைவுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

summary

Residents were shocked when an apartment building in the R.S. Puram area of ​​Coimbatore district suddenly shook. Police immediately evacuated the people from the building.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments