FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

தோசையில் கரப்பான் பூச்சி: பிரபல சைவ உணவகத்தில் அதிர்ச்சி!

பிரபல சைவ உணவகத்தில் வழங்கப்பட்ட தோசையில் கரப்பான் இருந்தது பற்றி..

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 1:37 pm IST
உணவில் கரப்பான் - video crop
பகிர்:

கோவை வடவள்ளி பகுதியில் உள்ள பிரபல ஆனந்தாஸ் சைவ உணவகத்தில் வழங்கப்பட்ட தோசையில் இறந்த நிலையில் கரப்பான் பூச்சி கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை இராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது மகளுடன் மருதமலை திருக்கோயிலுக்குச் சென்று மீண்டும் வீடு திரும்புகையில் வடவள்ளி பகுதியில் உள்ள பிரபல ஆனந்தாஸ், சைவ உணவகத்தில் காலை உணவு சாப்பிட சென்றுள்ளார். அப்போது அவர்களுக்குக் கொடுத்த தோசையில் கறுப்பான் பூச்சி இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த இவர்கள், உணவக நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.

புகாரின் பேரில், உணவக சூப்பர்வைசர், அதனைக் கண்டு வேதனை தெரிவித்ததுடன் உணவருந்த வந்தவர்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனால், இது தொடர்பாக நமக்கு எதற்கு வீண் வம்பு என பாதிக்கபட்ட நபர், உணவில் கரப்பான் பூச்சி கிடந்த விவகாரம் குறித்து புகார் எதுவும் தரவில்லை. இருப்பினும் இதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

கோவையில் மிக முக்கியமான உணவகங்களில் ஒன்றாக உள்ளது ஆனந்தாஸ், சைவ உணவுகளுக்கென்று பெயர் போன இந்த உணவகத்தில் ஊழியர்களின் அலட்சியத்தால் இத்தகைய செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உணவைக் குழந்தைகள் சாப்பிட்டு இருந்தால் என்ன நிலைக்கு ஆளாகக் கூடும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கோவை மாநகரில் உள்ள பெரிய பெரிய உணவகங்களிலும் சென்று, உணவு கூடங்களை ஆய்வு நடத்தி சுத்தமின்மை இல்லாத உணவகங்களின் உரிமைகளை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளனர். தோசையில் கரப்பான் பூச்சி இறந்து கிடந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A commotion ensued after a dead cockroach was found in a dosa served at the popular Anandhas vegetarian restaurant in the Vadavalli area of ​​Coimbatore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments