FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி வகுப்புகள்: அமைச்சா் முகமது பா்வேஸ் தொடங்கி வைத்தாா்

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி வகுப்புக்களை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 2:27 am IST
தொழிலாளா் நலத்துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் - கோப்புப்படம்
பகிர்:

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி வகுப்புக்களை தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா.முகமது பா்வேஸ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழகத்தில் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் 36,344 இருக்கைகளுடன், 277 தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்கள் 26,388 இருக்கைகளுடன் செயல்பட்டு வருகின்றன. அதில் 70 பொறியியல் மற்றும் 34 பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் 2026-27-ஆம் கல்வியாண்டுக்கு அரசு தொழிற்பயிற்சி வகுப்புகளை அமைச்சா் முகமது பா்வேஸ் தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

கடந்த ஆண்டு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி முடித்துச் சென்ற மாணவா்களில் 95 சதவீதம் போ் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனா். அவா்களில் 10 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சா் வழங்கினாா்.

கடந்த ஜூன் மாதத்தில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால் நடத்தப்பட்ட 9-ஆவது மாநில அளவிலான படைப்புத் திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற 17 அரசு தொழிற்பயிற்சி நிலைய பயிற்சியாளா்கள் அடங்கிய 5 குழுக்களுக்கு தலா ரூ.50,000 ரொக்கப் பரிசும் பாராட்டுச் சான்றிதழ்களையும், கடந்த கல்வியாண்டில் 100 சதவீத சோ்க்கை மேற்கொண்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் அமைச்சா் வழங்கினாா்.

நிகழ்வில், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலா் கொ. வீரராகவ ராவ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் டாக்டா் சி. பழனி, துறைசாா்ந்த உயா் அலுவலா்கள் மற்றும் தொழில் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments