வீட்டுக்கு வீடு தேசியக் கொடி வைக்க வேண்டும்: அண்ணாமலை
வீட்டுக்கு வீடு தேசியக் கொடி வைக்க வேண்டும் என்று வீ த லீடர் இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை வேண்டுகோள்.
சுதந்திர நாளையொட்டி, வீட்டுக்கு வீடு தேசியக் கொடி வைக்க வேண்டும் என்று இது நம்ம இயக்கத்தின் (வீ த லீடர்ஸ்) தலைவர் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக இது நம்ம இயக்கத்தின் (வீ த லீடர்ஸ்) தலைவர் அண்ணாமலை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த விடியோவில், “நாளை நம் இந்திய நாட்டின் 80-ஆவது சுதந்திர நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனால், காலை 10 மணி முதல் கிராமசபை கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன. நாடு முழுவதும் 12,525 கிராமங்களில் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.
Advertisement
Advertisement
நமது வீ த லீடர்ஸ் அமைப்பின் நோக்கமே அடிப்படை மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மாறுவோம், மாற்றுவோம் என்ற நோக்கத்தோடு களத்தில் இருக்கிறோம். கிராமசபை கூட்டங்களில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்.
இளைஞர்கள், பெண்கள், பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் என்று அனைவருமே பங்கேற்க வேண்டும். நாளை நடைபெறவிருக்கக்கூடிய கிராமசபைக் கூட்டத்திற்கு 10 நிகழ்ச்சி நிரல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
முதலாவதாக கடந்தாண்டு நடைபெற்ற கிராமசபையில் பயன்படுத்தப்பட்டபொது நிதியிலிருந்து வரவு - செலவு, மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு ஊரக வளர்ச்சித்திட்டத்தில் மக்கள் சக்தி பயன்பாடு, தூய்மையான குடிநீர்த் தொட்டிகளை மாந்தோறும் 5 மற்றும் 20 ஆம் தேதிகளில் சுத்தம் செய்ய வேண்டும் என்பது தொடர்பான தகவல்கள், அனைத்துக்கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் என்ன செய்துள்ளனர், வேளாண்மையில் என்ன செய்கின்றனர் என்பது தொடர்பாகவும் கிராமசபைக் கூட்டத்தில் பேசவிருக்கின்றனர். அந்தக் கூட்டத்தில் இளைஞர்கள் அதிகளவில் பங்கேற்று ஆக்கப்பூர்வமாக கேள்விகளை எழுப்ப வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் சொல்வதைப் போலவே பிரதமர் மோடி, இந்தாண்டும் ஒவ்வொருவரின் வீட்டிலும் மூவர்ணக் கொடியை ஏற்ற வேண்டுமென்று கூறியிருக்கிறார்கள். அதனையும் தேசப்பற்றோடு அனைவரின் வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். மாநில மற்றும் மத்திய அரசின் திட்டங்களை அனைவரிடம் சென்று சேர இந்த நாளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்” என்றார் அண்ணாமலை.
In connection with Independence Day, Annamalai, the leader of our movement ('We the Leaders'), has appealed for the national flag to be displayed at every home.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.