FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு பெய்த மழை குறித்து.....

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 8:19 pm IST
மழை - கோப்புப்படம்
பகிர்:

சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று இரவு பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் வெள்ளக்கிழமை காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இரவில் திடீரென கனமழை பெய்தது. சென்னையில் அண்ணா சாலை, கிண்டி, ஈக்காட்டுதாங்கல், வடபழனி, நுங்கம்பாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்துள்ளது.

திடீரென பெய்த மழையால் அலுவலகம் முடிந்து வீடு திரும்பியவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். மேலும் மழை காரணமாக பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னை தவிர்த்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்று பரவலாக மழை பெய்தது.

Advertisement

Advertisement

இந்த நிலையில் சென்னையைப் பொறுத்தவரையில் இன்று (14-08-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை/இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

summary

Widespread rain is occurring in various parts of Chennai tonight.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments