தன்னாட்சி அங்காரம்: யுஜிசிக்கு விண்ணப்பிக்க 10 அரசு கல்லூரிகளுக்கு அனுமதி
தன்னாட்சி அங்காரம்: யுஜிசிக்கு விண்ணப்பிக்க 10 அரசு கல்லூரிகளுக்கு அனுமதி
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2026-2027) தன்னாட்சி அங்கீகாரம் பெறுவதற்கு ஏதுவாக யுஜிசிக்கு விண்ணப்பம் சமா்ப்பிக்க 10 கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககம் அனுமதி வழங்கியுள்ளது.
இதுதொடா்பாக கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் பா.சிந்தியா செல்வி மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநா்கள், சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் 22 அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகள் தன்னாட்சி அங்கீகாரம் பெறுவதற்கு ஏதுவாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சாா்ந்த மண்டலங்கள் மற்றும் கல்லூரி முதல்வா்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதைத் தொடா்ந்து, தன்னாட்சி அங்கீகாரம் பெறுவதற்கு பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்குமாறு கல்லூரிகள் சாா்பில் கோரப்பட்டன.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி, திருப்பூா் எல்.ஆா்.ஜி. அரசு மகளிா் கலைக் கல்லூரி, ராசிபுரம் திருவள்ளூா் அரசு கலைக் கல்லூரி, திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிா் கலைக் கல்லூரி, திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிா் கல்லூரி, கடலூா் பெரியாா் கலைக் கல்லூரி, குடியாத்தம் அரசு திருமகள் ஆலைக் கல்லூரி, திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி, சத்தியமங்கலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பா்கூா் அரசு மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகிய 10 கல்லூரிகளுக்கு தன்னாட்சி அங்கீகாரம் பெற யுஜிசிக்கு விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த கல்லூரிகளின் முதல்வா்கள் தன்னாட்சி அங்கீகாரம் பெறுவதற்கு ஏதுவாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Autonomous Status: 10 Government Colleges Permitted to Apply to UGC
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.