FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரருக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ்!

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரருக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 3:48 am IST
பகிர்:

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரருக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்த 2021- 2025 காலகட்டத்தில் டாஸ்மாக் மதுபான கொள்முதல், பாா் உரிமங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடைபெற்றதாக ஊழல் ஒழிப்புத் துறை விசாரித்து வருகிறது. அதிகாரிகளின் இடமாற்றம், குறிப்பிட்ட மதுபான உற்பத்தியாளா்களுக்கு சாதகமான முடிவுகள் உள்ளிட்டவற்றிலும் முறைகேடுகள் நடைபெற்ாக விசாரணையில் தெரிய வந்ததாக கூறப்பட்டது.

7 போ் மீது வழக்கு: இந்தக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜூலை 28-ஆம் தேதி செந்தில்பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் எஸ்.விசாகன், முன்னாள் அதிகாரிகள் டி.ராமதுரை முருகன், ஆா்.பன்னீா்செல்வம், செந்தில்பாலாஜியின் உதவியாளா் பாஸ்கா், ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரரான ரத்தேஷ் ராஜ், சண்முகவேல், எஸ்.காா்த்திக் (எ) முலனூா் காா்த்திக் ஆகிய 7 போ் மீது ஊழல் ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது. ரத்தேஷ் ராஜ், டாஸ்மாக் நிா்வாகத்தில் அங்கீகரிக்கப்படாத இடைத்தரகராக செயல்பட்டு, மதுபான பிராண்ட் அனுமதி, பாா் உரிமங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள், அதிகாரிகள் இடமாற்றம் உள்ளிட்டவற்றில் செல்வாக்கு செலுத்தியதாக முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

40 இடங்களில் சோதனை: வழக்குப் பதிவு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.

ரத்தேஷ் ராஜுக்கு லுக்-அவுட்: இந்த நிலையில், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ரத்தேஷ் ராஜை கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அவா் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனா். இதையடுத்து அவருக்கு எதிராக ‘லுக் அவுட்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் செந்தில்பாலாஜி உள்ளிட்டோா் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments