FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.1% ஆக குறைவு!

கடந்த ஜூலை மாதத்தில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.1% ஆக குறைந்துள்ளது குறித்து...

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 9:29 pm IST
கோப்புப் படம்
பகிர்:

கடந்த ஜூலை மாதத்தில் நாட்டில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 5.1% ஆக குறைந்துள்ளது.

ஜூன் மாதத்தில் இந்த விகிதம் 5.5% ஆக இருந்த நிலையில், தொழிலாளர் பங்கேற்பு அதிகரித்துள்ளதால் இம்மாதம் வேலைவாய்ப்பின்மை விகிதம் சற்று குறைந்துள்ளது.

தேசிய புள்ளியியல் ஆய்வகத்தின் காலமுறையிலான தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பின்படி,

Advertisement

Advertisement

தொழிலாளர் சக்தி பங்கேற்பு விகிதம் மொத்தமாக 55.4 சதவிகிதத்தில் இருந்து 54.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

புள்ளி விவரங்களின்படி, வேலைவாய்ப்பின்மை குறைவுக்கு கிராமப்புறங்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.7 சதவிகிதமாக மாற்றம் காணாமல் உள்ளது.

ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், ஒட்டுமொத்த மற்றும் கிராமப்புற வேலையின்மை விகிதங்கள் ஏறக்குறைய நிலையாகவே உள்ளன.

அதேவேளையில், நகர்ப்புற வேலையின்மை விகிதம் ஜூலை 2025-ல் இருந்த 7.2 சதவீதத்திலிருந்து ஜூலை 2026-ல் 6.7 சதவீதமாக 0.5 சதவீதப் புள்ளிகள் குறைந்துள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

India's unemployment rate falls to 5.1 per cent in July as labour force participation strengthens

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments