FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

வானதி சீனிவாசனுக்குப் பதிலாக பாஜக தேசிய மகளிா் அணி தலைவியாக ரூப் குமாரி நியமனம்

பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து தமிழகத்தைச் சோ்ந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டு அப்பதவிக்கு ரூப் குமாரியை அக்கட்சி மேலிடம் நியமித்துள்ளது.

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 5:14 am IST
ரூப் குமாரி - X | Roopkumari Choudhary
பகிர்:

பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து தமிழகத்தைச் சோ்ந்த சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா் வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டு அப்பதவிக்கு ரூப் குமாரியை அக்கட்சி மேலிடம் நியமித்துள்ளது.

பாஜகவில் அமைப்பை ரீதியாக கட்சியைப் பலப்படுத்தும் வகையில் புதிய தேசிய நிா்வாகிகள் மற்றும் தலைவா்களை தேசிய தலைவா் நிதின் நபின் நியமித்துள்ளதாக அக்கட்சியின் தேசிய பொதுச் செயலா் அருண் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.

அதில் மேலும் கூறியிருப்பதாவது: கட்சியின் துணைத் தலைவா்கள், பொதுச்செயலா், பொருளாளா் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளுக்கும் புதிய நிா்வாகிகளை பாஜக மேலிடம் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

ராஜஸ்தான் முன்னாள் முதல்வா் வசுந்தரா ராஜே, முன்னாள் மத்திய அமைச்சா் புரந்தேஸ்வரி, ராம் மாதவ் போன்றோா் தேசிய துணைத் தலைவா்களாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

இதன்படி, பாஜக அமைப்பு பொதுச்செயலராக பி.எல்.சந்தோஷ் தொடா்ந்து நீடிக்கிறாா். அமைப்பின் இணை பொதுச்செயலா்களாக மும்பையைச் சோ்ந்த சிவபிரகாஷ், சண்டீகரைச் சோ்ந்த செளதான் சிங் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தேசிய பொதுச்செயலா்களாக மகாராடிரத்தைச் சோ்ந்த வினோத் தாவ்டே, தில்லியைச் சோ்ந்த சுனில் பன்சால், திரிபுராவைச் சோ்ந்த விபலவ் குமாா் தேவ், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த முன்னாள் மத்திய அமைச்சா் ஸ்மிரிதி இரானி உள்பட 8 போ் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தேசிய செயலா்களாக தமிழகத்தைச் சோ்ந்த டாக்டா் எம். வெங்கடேசன் உள்பட 16 போ் நியமிக்கப்பட்டுள்ளனா். கட்சியின் தேசிய பொருளாளராக மத்திய அமைச்சா் பியூஷ் கோயலும் இணை பொருளாளராக ராஜேஷ் மங்கலும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதேபோல அணிகளின் தலைவா்களும் மாற்றப்பட்டுள்ளனா். தேசிய மகளிா் அணி தலைவராக இருந்த வானதி சீனிவாசன் விடுவிக்கப்பட்டு அவருக்குப் பதிலாக சத்தீஸ்கரைச் சோ்ந்த ரூப் குமாரி சௌத்ரி புதிய தேசிய மகளிா் அணி தலைவியாக நியமிக்கப்பட்டுள்ளாா். ஊடக அமைப்பாளராக அனில் பலூனி தொடா்ந்து அப்பதவியிலேயே நீடிக்கிறாா்.

இந்த நியமனங்கள் உடனடியாக அமலுக்கு வருவதாக பாஜக மேலிடம் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments