FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

தமிழர்கள் சுட்டுக் கொலை; பட்டும் படாமல் ஓர் அறிக்கை: முதல்வர் மீது குற்றச்சாட்டு!

கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்வர் விஜய் பட்டும் படாமல் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளதாக உதயநிதி குற்றம் சாட்டியுள்ளது பற்றி...

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 9:28 pm IST
தமிழக முதல்வர் விஜய் - எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் - கோப்புப் படம்
பகிர்:

கர்நாடகத்தில் தமிழர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் முதல்வர் விஜய் பட்டும் படாமல் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தை ஒட்டிய வனப்பகுதியில் மான் வேட்டையாடியதாக குற்றச்சாட்டி, அப்பகுதியைச் சேர்ந்த 3 தமிழர்களை கர்நாடக வனத்துறையினர் கொடூரமான முறையில் சுட்டுக்கொலை செய்தனர்.

இதையடுத்து, தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக. 18) கர்நாடகத்தின் வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.

Advertisement

Advertisement

இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

கர்நாடகத்தில் மூன்று தமிழர்களை அம்மாநில வனத்துறையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக எந்த கண்டனத்தையும் வெளியிடாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சட்டப்பேரவையில் இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்த அமைச்சரும், கர்நாடகத்தின் பாணியையே எதிரொலித்தார். தமிழ்நாடு அரசு சார்பிலோ, முதல்வர் சார்பிலோ கர்நாடக முதல்வரிடம் விளக்கம் கேட்டு எந்தவொரு கடிதமும் இதுவரை எழுதப்படவில்லை. தவெக தலைவர் என்கிற நிலையில் பட்டும் படாமல் ஓர் அறிக்கையை மட்டும் வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த சூழலில் சென்னையில் நாளைய தினம் தென் மாநில முதல்வர்கள் கூட்டம் கூடுகிறது. அந்தக் கூட்டத்தின் போது, கர்நாடக முதல்வரை சந்தித்து, இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் உரிய விளக்கத்தைக் கேட்டுப் பெற வேண்டும்.

இந்த வழக்கு விசாரணையை கர்நாடக காவல்துறை விசாரிப்பதற்கு பதிலாக நம்பகமான நீதி விசாரணை நடத்திட தமிழ்நாடு அரசு கோர வேண்டும். இந்த சம்பவத்தில் நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணைய வழிகாட்டுதல்கள் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் அடிப்படையில் இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு கூடுதல் இழப்பீடு தரப்படுவதை உறுதி செய்ய கர்நாடக முதல்வரிடம் தமிழ்நாட்டு முதல்வர் வலியுறுத்த வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

summary

Opposition Leader Udhayanidhi Stalin has accused Chief Minister Vijay of issuing a statement that merely skims the surface regarding the killing of Tamils ​​in Karnataka.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments