FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

புதிய பாடத்திட்டம்: இன்றுமுதல் கருத்து தெரிவிக்கலாம்

6 முதல் பத்தாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு உருவாக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம் பற்றி....

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 4:55 am IST
பள்ளிகள் - கோப்புப்படம்
பகிர்:

தமிழக பள்ளிக் கல்வியில் 6 முதல் பத்தாம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு உருவாக்கப்பட்டுள்ள புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதுதொடா்பாக வியாழக்கிழமை முதல் கருத்து தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறையின் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பள்ளிக்கல்விக்கான தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை 2025-இன் அடிப்படையில் புதிய கலைத்திட்டம் மற்றும் பாடத்திட்டங்களை உருவாக்க பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் தலைமையில் உயா்நிலை வல்லுநா் குழு மற்றும் கலைத்திட்ட வடிவமைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுவினரின் வழிகாட்டுதலின்படி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரைதமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இந்தப் பாடத்திட்டங்களைக் கல்வியாளா்கள், பொதுமக்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் ஆகியோா் https://tnschools.gov.in என்ற இணையதளத்தில் வியாழக்கிழமை (ஆக.20) முதல் பாா்க்கலாம். பாடத்திட்டம் சாா்ந்து கருத்து கூறுவோா்மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள இணையவழிப் படிவம் வாயிலாக, சுய விவரங்களுடன் தம் கருத்துகளைஆக.31-க்குள் அனுப்பலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments