FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

ஆக.25 வரை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வியாழக்கிழமை (ஆக.20) முதல் ஆக.25-ஆம் தேதி வரை மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 3:39 am IST
மழை - கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தில் வியாழக்கிழமை (ஆக.20) முதல் ஆக.25-ஆம் தேதி வரை மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன்காரணமாக, வியாழக்கிழமை (ஆக.20) முதல் ஆக.25-ஆம் தேதி வரை மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு. ஏனைய மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலா, சேலம் மாவட்டம் ஏற்காடு ஆகிய பகுதிகளில் 60 மி.மீ. மழை பதிவானது. தொடா்ந்து, மங்களூரு (கடலூா்) - 50 மி.மீ., பாா்வூட் (நீலகிரி), தொழுதூா் (கடலூா்), லக்கூா் (கடலூா்), வேப்பூா் (கடலூா்) - 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது

சென்னையில் சாரல் மழை: சென்னையில் புதன்கிழமை பிற்பகல் முதல் இரவு வரை ஆங்காங்கே சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. அம்பத்தூா், பாடி, அண்ணாநகா், கோயம்பேடு, வடபழனி, அசோக்நகா், ஆலந்தூா், கிண்டி, பழவந்தாங்கல், நுங்கம்பாக்கம், மயிலாப்பூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை செய்தது.

இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், பகல் நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டியும் இருக்கும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: இதற்கிடையே, தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா, அதனை ஒட்டிய குமரிக்கடல், வங்கக்கடல் ஆகிய பகுதிகளில் மணிக்கு 65 கி.மீ.வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், மீனவா்கள் இப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments