FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலி

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவுநாளில் அவரது தியாகத்தைப் போற்றி வணங்குவோம் என்று முதல்வர் சி. ஜோசப் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 10:07 am IST
முதல்வர் விஜய் புகழஞ்சலி.
பகிர்:

விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவுநாளில் அவரது தியாகத்தைப் போற்றி வணங்குவோம் என்று முதல்வர் சி. ஜோசப் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு முதல்வர் விஜய்யின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு அஞ்சாமல், நம் மண்ணில் சுதந்திரக் கனலை ஏற்றிய விடுதலைப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் அவர்களின் நினைவுநாளில் அவரது தியாகத்தைப் போற்றி வணங்குவோம்!

Advertisement

Advertisement

மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாக விளங்கி, நெற்கட்டான்செவல் போர்க்களத்தில் ஆங்கிலேயப் படைகளை ஒற்றை வீரராக எதிர்த்து நின்று, நிலைகுலையச் செய்ததோடு, தன் ஒரு கரத்தையே இழந்தபோதிலும் பல போர்களைப் புரிந்து தாய்நாட்டு விடுதலைக்காகத் தனது இன்னுயிரை தியாகம் செய்த ஒண்டிவீரன் அவர்களின் வீரத்தையும் தேசப்பற்றையும் நெஞ்சாரப் போற்றிடுவோம்!

வீரம் செறிந்த தமிழர் வரலாற்றில் ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!” எனப் பதிவிட்டுள்ளார்.

summary

Chief Minister C. Joseph Vijay has paid a glowing tribute to freedom fighter Ondiveeran on his memorial day, honoring and saluting his sacrifice.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments