தாய்நாட்டிற்காகத் தனது உயிரையே அர்ப்பணித்தவர் அழகு முத்துக்கோன்: முதல்வர் விஜய்
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் பிறந்தநாளையொட்டி, முதல்வர் விஜய் புகழாரம்...
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் பிறந்தநாளையொட்டி, முதல்வர் ச. ஜோசப் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாளையொட்டி, முதல்வரின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக விடுதலைக் குரல் எழுப்பிய சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளில் எனது மரியாதையையும் வீர வணக்கத்தையும் செலுத்துகிறேன்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள கட்டாலங்குளத்தில் பிறந்த மாவீரன் அழகுமுத்துகோன், தமிழக மண்ணின் வீரத்திற்கும், தன்மான உணர்விற்கும், சுதந்திர வேட்கைக்கும் அடையாளமாக விளங்கியதோடு, அடிமை வாழ்வைவிட சுதந்திரமே உயர்ந்தது என்பதைத் தனது சொல்லாலும் செயலாலும் உணர்த்தி, தாய்நாட்டிற்காகத் தனது உயிரையே அர்ப்பணித்தவர்.
Advertisement
Advertisement
அவரது ஒப்பற்ற வீரமும், தன்னலமற்ற தியாகமும், அசைக்க முடியாத தேசப்பற்றும் தமிழினத்தின் பெருமையாக என்றும் நிலைத்திருக்கும்" என்று கூறியுள்ளார்.
Azhagu Muthukone sacrificed his very life for the country, says CM Vijay
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.