தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ஜோசப் விஜய்! ஜன நாயகனில் வரவேற்பைப் பெயர் டைட்டில்!
ஜனநாயகன் திரைப்படம் வெளியானது. இதில் விஜய்யின் பெயர் கவனம் ஈர்த்துள்ளது குறித்து...
ஜன நாயகன் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று (ஜூலை 23) வெளியானது.
தமிழகத்தில் காலை 8.30 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படுகிறது. எனினும் வெளிநாடுகளில் காலை 4.30 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டது.
விஜய்யின் கடைசிப் படம் என்பதாலும் பல்வேறு பிரச்னைகளைத் தாண்டி படம் வெளியாவதாலும் திரையரங்குகளில் ரசிகர்கள் பலர் மிகுந்த ஆவலுடன் படத்தை கண்டு ரசித்தனர்.
Advertisement
Advertisement
முதல்வராக பதவியேற்ற பிறகு படம் வெளியாகியுள்ளதால், படத்தில் விஜய் பெயர் இடம்பெறும் டைட்டில் கார்டில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி ச. ஜோசப் விஜய் எனத் திரையிடப்பட்டது.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினரை நோக்கி முதல்வர் விஜய் செய்த சைகையைக் காட்டி இந்த டைட்டில் போடப்பட்டதால், ரசிகர்கள் பலர் மிகுந்த ஆரவாரத்துடன் இதனைக் கொண்டாடினர். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
ஜனநாயகன் திரைப்பட டிக்கெட் முன்பதிவில் மட்டும் ரூ. 50 கோடி வரை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
Tamil Nadu Chief Minister Thalapathy Joseph Vijay A jana nayakan name and title receiving a welcome among fans
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.