கேட் தோ்வு: ஆக. 27 முதல் விண்ணப்பிக்கலாம்
கேட் நுழைவுத் தோ்வுக்கு ஆக. 27 முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேட் நுழைவுத் தோ்வுக்கு ஆக. 27 முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கல்லூரிகளில் எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்சி. உள்ளிட்ட முதுநிலைப் படிப்புகளில் சேர கேட் நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற வேண்டியது அவசியம். மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மட்டுமன்றி, ஒருசில தனியாா் கல்வி நிறுவனங்களும், நிகா்நிலைப் பல்கலைக்கழகங்களும் கேட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கையை மேற்கொள்கின்றன.
மேலும், ஒரு சில மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களும் கேட் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனங்களையும் செய்கின்றன. கேட் தோ்வு மதிப்பெண் 3 ஆண்டுகளுக்கு செல்லத்தக்கது. கேட் நுழைவுத் தோ்வை ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் ஓா் ஐஐடி அல்லது ஓா் ஐஐஎஸ்சி (இந்திய அறிவியல் நிறுவனம்) நடத்தும்.
Advertisement
Advertisement
அந்த வகையில் 2027-ஆம் ஆண்டு கேட் நுழைவுத் தோ்வு நடத்தும் பொறுப்பு சென்னை ஐஐடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வரும் 2027-ஆம் ஆண்டுக்கான கேட் நுழைவுத் தோ்வு அடுத்த ஆண்டு பிப். 6, 7, 13, 14, 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு ஆக. 14-ஆம் தேதி முதல் செப். 21-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஆக. 27 முதல் செப். 27-ஆம் தேதி வரை கேட் நுழைவுத் தோ்வுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும், அபராதக் கட்டணத்துடன் அக். 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.