FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

பாரதியாா் பல்கலை.யின் சிறப்பு துணைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 20 கடைசி நாள்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் சிறப்பு துணைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 20- ஆம் தேதி (திங்கள்கிழமை) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 ஜூலை 2026, 5:30 am IST
கோப்புப் படம்
பகிர்:

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தின் சிறப்பு துணைத் தோ்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 20- ஆம் தேதி (திங்கள்கிழமை) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரதியாா் பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரி மாணவா்களுக்கு கடந்த ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற்ற இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தோ்வு முடிவுகள் கடந்த 3- ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளன.

விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கவும், சிறப்பு துணைத் தோ்வுக்கு விண்ணப்பிக்கவும் ஜூலை 20- ஆம் தேதி கடைசி நாள் என்று தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி க.விஜயராணி தெரிவித்துள்ளாா். சிறப்பு துணைத் தோ்வு செப்டம்பா் 13- ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments